மூன்று நாட்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி. தமிழக அரசின் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் உள்ளது. இங்கு மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல் குறித்து மூன்று நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. அது குறித்த விரிவான விளக்கங்களை பார்க்கலாம்.
மூன்று நாட்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி ! தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது !
விளம்பரம்
தொழில் செய்பவர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அதற்கு ஒரே வழி விளம்பரம் மட்டுமே. இன்று அனைத்தும் டிஜிட்டல் மையமாக மாறி உள்ளது. எனவே விளம்பரமும் டிஜிட்டல் மையமாக கொடுக்க வேண்டியுள்ளது. முகநூல், whatsapp, இன்ஸ்டாகிராம், போன்ற அனைத்திலும் விளம்பரம் செய்யலாம். அதற்காக ஆகும் செலவுகள் குறைவுதான். ஆனால் பலருக்கும் அது பற்றிய விழிப்புணர்வு இல்லை.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்
ஆன்லைன் மார்க்கெட்டிங் முறையில் தங்களது பொருட்களை சந்தைப்படுத்துதல். தேடு பொறி மேம்படுத்துதல். தேடு பொறி சந்தைப்படுத்துதல். அதாவது ஒருவர் ஒரு பொருளை கூகுள் மூலம் தேடும்போது உங்களது நிறுவனத்தை முன்னுரிமைப்படுத்தும். இதனால் விளம்பரங்கள் எளிதில் அவர்களுக்கு கிடைக்கும். அதில் பல வகைகள் உண்டு.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகள்
தேடுபொறி மேம்படுத்துதல்
தேடுபொறி சந்தைப்படுத்துதல்
சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல்.
லிங்க் மூலம் சந்தைப்படுத்துதல்.
காட்சி மூலம் சந்தைப்படுத்துதல்.
மின்னஞ்சல் மூலம் சந்தைப்படுத்துதல்.
மொபைல் மார்க்கெட்டிங் மூலம் சந்தைப்படுத்துதல்.
மூன்று நாள் பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மூன்று நாட்கள் பயிற்சி நடத்தப்படுகிறது. 28 11 2023 முதல் 30 11 2023 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கீழ்காணும் முறைகள் பயிற்றுவிக்கப்படும்.
மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம் ! யாகசாலை பூஜை இன்று தொடக்கம் !
மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல்
மின்னணு முறையின் நுட்பங்கள்
இணையத்தை உருவாக்குதல்
சமூக ஊடகத்தின் மூலம் சந்தைப்படுத்துதல்
சமூக ஊடகங்களை இணைத்தல்
நிலையான மேலாண்மை அமைப்பு
சமூகப் பகிர்வு உளவியல்
சமூக ஊடகப் பகுப்பாய்வு
டொமின் பெயர் உருவாக்குதல் மற்றும் ஹோஸ்டிங்
இணையதள வடிவமைப்பு
நுட்பங்கள் மற்றும் விதிகள்
மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல்
ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்ப பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம்.
சிட்கோ தொழிற்பேட்டை,
பார்த்தசாரதி கோயில் தெரு,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை 600032