இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் அக்னிநட்சத்திர வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதனால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமான நிலையில் சுற்றுலா தளங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டன. இந்த பிரச்னையை தீர்க்கும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோன காலத்தை போன்று இ- பாஸ் நடைமுறையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அந்த வகையில் மே மாதம் 7 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு உள்ளூர் வியாபாரிகள் முதல் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் இந்த இ- பாஸ் நடைமுறையில் தங்களின் வியாபாரம் பாதிக்கும் என்று அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.
உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024 ! தொடங்கும் தேதி அறிவிப்பு – பல்வேறு வகை நாய்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !
இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் :
கொடைக்கானலில் இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்யாவிட்டால் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என்று கொடைக்கானல் ஹோட்டல்ஸ் அண்ட் ரிச்சர்ட்ஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.