இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு.மக்களவை தேர்தல் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.
மேலும் இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இதுபற்றி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
இபிஎஸ் பிரதமராக வாய்ப்புள்ளது :
தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு பிறகு இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு என அதிமுக எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார். இபிஎஸ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் கூறியதாவது,
லோக்சபா தேர்தல் – தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது.., வீடு தேடி வரும் அதிகாரிகள்!!
தேர்தலில் போட்டியிடும் சிறிய கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தல் இபிஎஸ் பிரதமராக வாய்ப்புள்ளது என்றும், தேர்தலில் போட்டியிடாமல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும், தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெற முடியாது என்று தெரிந்தே தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா கருத்து தெரிவித்துள்ளார்.