இறால் கிரேவி கடல் உணவு என்பது அனைவருக்கும் பிடித்த உணவு. விடுமுறை நாட்களில் அசைவ உணவு இல்லை என்றால் விடுமுறை நாளே நிறைவடையது. அசைவ உணவுகளில் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தது கடல் உணவுகள். மீன் வகைகள் அனைவருக்கும் பிடித்த உணவு என்பதில் வியப்பில்லை. அதிலும் இறால் மீன் வகைகள் என்றால் கடல் உணவுகளில் சுவை அதிகம் இருக்கும் உணவு. இறால் மீன் தோலை கடைகளில் சுத்தம் செய்து தந்து விடுவார்கள். அதனை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று எளியமையான பொருட்களை வைத்து சமைக்கும் முறைகள் பற்றியும் காண்போம்.
இறால் கிரேவி சுவையாக எளிமையாய் செய்யலாம் வாங்க !
சுத்தம் செய்யும் முறை :
1. இறால் மேல் இருக்கும் தோலை மீன் கடைகளில் சுத்தம் செய்து தந்து விடுவார்கள்.
2. பின்னர் இறால் உடல் பகுதியில் கருப்பு நிறத்தில் இருக்கும் நரம்பு போன்ற பகுதியை நிக்கி விட வேண்டும்.
3. இறால் உடல் பகுதியில் இருக்கும் நரம்பினை நீக்கிய பின் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து நன்றாக தண்ணீர் பயன்படுத்தி மூன்று முதல் ஐந்து முறைகள் வரையில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறால் சமைக்க தேவையானவை :
1. இறால் – ஒரு கிலோ
2. பெரிய வெங்காயம் – 2 துண்டுகள்
3. சிறிய வெங்காயம் – கால் கிலோ
4. தக்காளி – 1 துண்டு
5. மிளகாய் தூள் – 4 ஸ்பூன்
6. மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
7. கறி மசால் தூள் – 1 ஸ்பூன்
8. உப்பு – தேவையான அளவு
9. எண்ணெய் (நல்லெண்ணெய் / கடலை எண்ணெய்) – 4 ஸ்பூன்
10. கொத்தமல்லி – சிறிதளவு
11. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள் ! முதல் இடத்தில் உங்க பெயர் இருக்க வாய்ப்பு இருக்கு !
அரைக்க வேண்டியவை :
1. ஒரு தக்காளி மற்றும் இரண்டு பெரிய வெங்காயத்தினை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
2. இஞ்சி மற்றும் பூண்டினை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை :
1. இறால் சமைப்பதற்கு முதலில் அடுப்பை ஆன் செய்து வாணலியை வைக்க வேண்டும்.
2. பின்னர் நான்கு ஸ்பூன் நல்லெண்ணய் அல்லது கடலை எண்ணெய் சேர்க்க வேண்டும்.
3. பின்னர் சின்ன வெங்காயத்தினை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
4. சின்ன வெங்காயம் வதங்கிய பின் தக்காளி வெங்காயம் விழுதினை சேர்க்க வேண்டும்.
5. தக்காளி வெங்காய கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்த உடன் இஞ்சி பூண்டு விழுதினை சேர்க்க வேண்டும்.
6. பின்னர் மிளகாய் பொடி , மஞ்சள் தூள் மற்றும் கறி மசால் பொடி போன்றவைகளை சேர்ந்தது எண்ணெயில் இருந்து மசாலா பிரியும் படி வதக்க வேண்டும்.
7. மசாலா கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்த உடன் கழுவி வைத்திருக்கும் இறாலை சேர்க்க வேண்டும்.
8. பின்னர் உப்பு சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலக்க வேண்டும்.
9. இறால் மூழ்கும் படி தண்ணீர் சேர்ந்தது இறாலை வேக வைக்க வேண்டும்.
10. இறால் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்களில் வெந்து விடும்.
11. இறால் வெந்த பின் அடுப்பின் தீயினை மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
12. 5 நிமிடங்களுக்கு பின் சிறிதளவு மல்லி தூள் சேர்த்து இறக்க சுவையான இறால் கிரேவி ரெடி.
இதே முறையை பயன்படுத்தி இறாலை குக்கர் பயன்படுத்தியும் செய்யலாம். குக்கரில் இறால் வேக வைக்கும் போது மூன்று முதல் நான்கு விசில்கள் போதுமானது.