தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி அனைத்து நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி-யில் மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, ஈரோடு கிழக்கில் இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு கட்சியினர் போட்டி போடுகின்றனர். எனவே, தற்போது அப்பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை, உயர்நீதிமன்றம் உத்தரவு!!
எனவே இதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசாங்கத்திடம் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரியுள்ளோம். எனவே தமிழக அரசிடம் அனுமதி கிடைத்தவுடன் மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!