Home » செய்திகள் » ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?..,  புஸ்ஸி ஆனந்த்  அறிவிப்பு!!

விரைவில் நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி போடவில்லை என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உயிரிழந்த நிலையில், அவர் பதவி வகித்து வந்த  ஈரோடு கிழக்கு தொகுதி பதவி காலியாக இருக்கிறது. எனவே அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் இந்த இடைத்தேர்தலில் கலந்து கொள்ள நினைக்கும் கட்சியினர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

இதனை தொடர்ந்து இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது.

பாஜக கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்று கேள்வி எழும்பி வந்தது.

இதற்கிடையே சென்னை பனையூரில், உள்ள தலைமை செயலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் பாலாஜி சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ” நம்முடைய தலைவர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் பொழுது தெளிவாக சொல்லிவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று தெரிவித்துள்ளார். எனவே எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் போட்டியிட போவதில்லை. மேலும் எந்த கட்சிக்கும் நம்முடைய ஆதரவு கிடையாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?

இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ..  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top