சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2023 தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகிய சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் ( One Stop Centre ) அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. அதன் படி ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட இருக்கின்றனர். ஈரோடு சமூகநலத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்வோம்.
அமைப்பின் பெயர் :
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. தகவல் தொழில் நுட்ப பணியாளர் ( IT Administrator )
2. வழக்கு தொழிலாளி ( Case Worker )
3. பல்நோக்கு உதவியாளர் ( Multipurpose Assistant ) போன்ற பணியிடங்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. தகவல் தொழில் நுட்ப பணியாளர் – 1
2. வழக்கு பணியாளர் – 2
3. பல்நோக்கு உதவியாளர் – 2 என மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஈரோடு சமூக நலத்துறையில் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
1. தகவல் தொழில் நுட்ப பணியாளர் :
அரசின் அனுமதியுடன் செயல்படும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் கணினி பொறியாளர் அல்லது கணினி அறிவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
2. வழக்கு பணியாளர் :
அரசின் கீழ் இயங்கி வரும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் உளவியல் அல்லது சமூக பணி சார்ந்த திட்டம் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. பல்நோக்கு உதவியாளர் :
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் சமூக நலத்துறையில் காலியாக இருக்கும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
CLRIல் ரூ. 25,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
அனுபவம் :
1. தகவல் தொழில் நுட்ப பணியாளர் :
தகவல் தொழில் நுட்ப பணியாளர் பணியில் குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். மேலும் அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்த அமைப்புகள் , பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்ற துறைகளில் பணி அனுபவம் இருப்பவர்கள் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
2. வழக்கு பணியாளர் :
வழக்கு பணியாளர் பணியில் ஒரு ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் , அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் மற்றும் அமைப்புகளில் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
3. பல்நோக்கு உதவியாளர் :
நன்றாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும் மேலும் மையத்தினை நன்றாக பராமரிக்க தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு :
ஈரோடு சமூக நலத்துறையில் காலியாக இருக்கும் தகவல் தொழில் நுட்ப பணியாளர் , வழக்கு பணியாளர் , பல் நோக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயதுத்தகுதி :
சமூக நலத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய பணியாளர்களுக்கு விண்ணப்பிக்க வயதுத் தகுதி குறிப்பிடப்படவில்லை.
சம்பளம் :
1. தகவல் தொழில் நுட்ப பணியாளர் – ரூ. 18,000 வரையில்
2. வழக்கு பணியாளர் – ரூ. 15,000 வரையில்
3. பல்நோக்கு உதவியாளர் – ரூ. 6,400 வரையில் ஊதியமாக ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
வருகின்ற 15.9.2023 அன்று மாலை 5 மணிக்குள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் தபால் மூலம் தங்களின் விண்ணப்பபடிவங்களை அனுப்ப வேண்டும்.
சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2023
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலர் ,
மாவட்ட சமூக நல அலுவலகம் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,
6வது தளம் ,
ஈரோடு – 638011 .
தமிழ்நாடு .
தொலைபேசி எண் : 0424-2261405
விண்ணப்பக்கட்டணம் :
தபால் மூலம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கும் ஐந்து பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.