மதுபோதையில் காரை தாறுமாறாக ஒட்டிய எதிர்நீச்சல் நடிகை?.., ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கிய பரிதாபம்!!மதுபோதையில் காரை தாறுமாறாக ஒட்டிய எதிர்நீச்சல் நடிகை?.., ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கிய பரிதாபம்!!

விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் நடிகை?

சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தற்போது மக்களின் ஃபேவரைட் சீரியலாக  இருந்து வரும் தொடர் தான் எதிர் நீச்சல். பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ஜனனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மதுமிதா. பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான இவர் இந்த சீரியல் மூலம் தான் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இந்நிலையில் அவரும் அவருடைய ஆண் நண்பரும் சேர்ந்து குடிபோதையில் காரை ஓட்டி சென்று கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியாகின.

அதாவது மதுமிதாவும் ஆண் நண்பரும் சேர்ந்து நல்ல மது அருந்திவிட்டு ராங் ரூட்டில் காரை ஓட்டி சென்ற நிலையில், அப்போது எதிரில் வந்த காவலர் வந்த பைக் மீது மோதியது. இதில் மதுமிதாவுக்கும், காவலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் காரை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் எங்கள் மீது தவறு இல்லை என்றும், காவலர் தான் வண்டி மீது மோதினார் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழக மீனவர்கள் அலார்ட்., இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *