
சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது தர்ஷினி காணாமல் போனதற்கு ஜனனி, ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் தான் காரணம் என்று கூறி போலீஸ் ஸ்டேஷனில் குணசேகரன் புகார் கொடுக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஆளே இல்லாத நடுக்காட்டில் அனாமத்தாக திரியும் தர்ஷினி எங்கே செல்வது என்று தெரியாமல் காட்டையே சுற்றி வருகிறார். எப்படியாவது தன்னோட பிள்ளையை காப்பாற்ற நினைத்த ஈஸ்வரியும் குணசேகரன் போலீசில் மாட்டி விட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் இன்றைக்கான புரோமோ வெளியாகிய நிலையில், அதில் குணசேகரன் என் பிள்ளை காணாமல் போக காரணமாக இருந்த அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இதனை தொடர்ந்து நீதிபதி அவர்களுக்கு ஒரு தீர்ப்பு ஒன்றை எழுதிய நிலையில், அது என்னவென்று சஸ்பென்சாக இருக்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. இப்படி இருக்கும் கட்டத்தில் தர்ஷினியை குணசேகரன் காப்பாற்றி விடுவாரா? இல்லை , ஈஸ்வரி ஜீவானந்ததுடன் சேர்ந்து மகளை கண்டு பிடிப்பாரா? என்று அடுத்து வரும் எபிசோடுகளில் தெரிந்து விடும்.