எதிர்நீச்சல் பிரபலம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்களுக்கு மிகவும் பிடித்த தொடர் என்றால் அது எதிர் நீச்சல் தான். பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 1000 எபிசோடுகளை தாண்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. பெண்களை அடிமைதனத்தை உணர்த்தும் விதமாக சீரியலின் கதை அமைந்த நிலையில், குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்தவர் தான் நடிகர் மாரிமுத்து. இந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான இவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரின் கேரக்டரில் பிரபல நடிகர் வேலு ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கி வரும் இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?., சினிமாவுக்குள் வருவதற்கு முன்னர் அவர் இந்திய ராணுவத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து பின்பு அதிலிருந்து வந்து அஞ்சலகத்தில் பணிபுரிந்தாராம். அஞ்சலகத்தில் வேலை பார்க்கும் பொழுது அவருக்கு எழுத்து மேல் இருந்த ஆர்வத்தால், நாவல் எழுத தொடங்கினார். அதன்படி அவர், குற்றப்பரம்பரை, குருதியாட்டம், பட்டத்து யானை போன்ற பல நாவல்-களை எழுதியுள்ளார். இப்படி இரண்டு மத்திய அரசு வேலையை உதறிவிட்டு நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவை தற்போது வரை மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டதே கிடையாதாம்.