தர்ஷினியை மீட்ட ஜீவானந்தம்.., வலைவிரித்து தேடும் போலீஸ்.., தலைகீழாக மாறிய கதைகளம்.., "எதிர்நீச்சல் "ப்ரோமோ இதோ!!தர்ஷினியை மீட்ட ஜீவானந்தம்.., வலைவிரித்து தேடும் போலீஸ்.., தலைகீழாக மாறிய கதைகளம்.., "எதிர்நீச்சல் "ப்ரோமோ இதோ!!

“எதிர்நீச்சல் “ப்ரோமோ

சின்னத்திரையில் அதிக பேசப்படும் சீரியல் என்றால் அது சன் டிவியில் ஒளிபரப்பாகும் “எதிர் நீச்சல்” தொடர் தான். அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் போய் கொண்டிருக்கும் இந்த சீரியல் 1000 எபிசோடுகளை தாண்ட இருக்கிறது. கடந்த சில வாரங்களாக குணசேகரனின் மகள் சில ரவுடிகளால் கடத்தப்பட்ட நிலையில், அந்த வீட்டு பெண்கள் மகளை காப்பாற்றினார்களே என்பதை பற்றி தான் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. இதற்கிடையில் அண்ணனை எதிர்த்து தம்பிகள் பேசியது தான் இந்த சீரியலின் டிவிஸ்ட்டாக கருதப்படுகிறது. குணசேகரன் தான் தனது சொந்த மகளை கடத்தியுள்ளார் என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக பெண்களுக்கு தெரிய வருகிறது.

இந்நிலையில் பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் தர்ஷினி, அந்த ரவுடிகள் கண்ணில் மண்ணை போட்டு அங்கிருந்து தப்பித்து செல்கிறார். இன்னொரு பக்கம் ஜீவானந்தம் தர்ஷினியை தேடி அலைகிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஜீவானந்தம் கண்ணில் தர்ஷினி பட அவரை காப்பாற்றி தனது காரில் ஏற்றி கிளம்புகிறார். தர்ஷினி வாயை திறந்தால் மட்டுமே உண்மை என்னவென்று போலீஸ் காரர்களுக்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பக்தர்களே ரெடியா?.., சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி?., ஆனா.., ஒரு கண்டீஷன்?., வனத்துறை அதிரடி அறிவிப்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *