கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கா விட்டாலும் நாம் தமிழர் போட்டியிடும் ! தலைமை தேர்தல் அதிகாரி சந்திப்புக்கு பிறகு சீமான் பேட்டி - வேறு சின்னத்திற்கு கோரிக்கைகரும்பு விவசாயி சின்னம் கிடைக்கா விட்டாலும் நாம் தமிழர் போட்டியிடும் ! தலைமை தேர்தல் அதிகாரி சந்திப்புக்கு பிறகு சீமான் பேட்டி - வேறு சின்னத்திற்கு கோரிக்கை

கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கா விட்டாலும் நாம் தமிழர் போட்டியிடும். சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு சந்தித்தார். அப்போது அவரிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சீமான் கூறியதாவது முன்னுரிமை மற்றும் ஓட்டு சதவீதத்தை அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழருக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தமிழக வெற்றிக்கழகம் உறுப்பினர் சேர்க்கை ! புதிய செயலி அறிமுகம் – விஜய்யின் அடுத்தகட்ட மூவ் !

ஆனால் அதே முன்னுரிமை என்ற கருத்தை கூறி தேர்தல் ஆணையம் வேறுவொரு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பரிந்துரை செய்வதாக கூறினார். மேலும் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் வேறு ஒரு சின்னத்தை கேட்டுள்ளோம். அவ்வாறு சின்னம் கிடைக்க வில்லை என்றாலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *