நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சாரன ஓபிஎஸ் நெல்லையில் தொண்டர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டர்களை சந்திக்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை நேரில் பரிசோதித்து பார்த்து ஓய்வு எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும், அதிமுக கட்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் அதிமுக கட்சியை மீட்டெடுக்க கடந்த டிசம்பர் மாதம் முதல் இருந்தே ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். மேலும் ஓபிஎஸ் பாஜகவுடன் சேர்ந்து போட்டி போட இருக்கும் நிலையில் எப்படியாவது அதிமுகவை தன் வசம் இழுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கடுமையாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.