வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும், வயது மூப்பின் காரணமாக சிறையில் அடைப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த மனு மீதான விசாரணையில் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்களித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு தடையில்லை என்றும் இடைக்கால நிவாரணமாக தான் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.