எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் காலமானார் - அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!!எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் காலமானார் - அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!!

தயாரிப்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், முன்னாள் முதலமைச்சராக விளங்கி தற்போது வரை மக்கள் மனதில் வாழ்ந்து வருபவர் தான் நடிகர் எம்.ஜி.ஆர். அவர் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்து வெற்றிக்கு வழிவகுத்தவர் தான் ஆர்.எம்.வீரப்பன். இவர் எம்.ஜி.ஆர் pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதையடுத்து எம்.ஜி.ஆர் அதிமுகவை துவங்கிய போது, அவருடன் சேர்ந்து இவரும் பக்க துணையாக இருந்து வந்தார்.

அதன்படி அவர் கடந்த 1977 – 1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1986 இடைத் தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும் 1991 இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்ற தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அதன்பின் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி  எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியையும் நிறுவினார்.

இதனை தொடர்ந்து வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். மேலும் 97 வயதாகும் இவர்  உடல் நல பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இறப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பயணிகளே.., கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கம் – எந்தெந்த ஊருக்கு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *