தமிழக மின்வாரிய துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜி
கடந்த ஆண்டு தமிழக மின்வாரிய துறை அமைச்சராக விளங்கி வந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 15 முறைக்கு மேல் அவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடி ஓடிய போதிலும், அமலாக்கத்துறை கூறும் கோரிக்கைகளால் ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையில் சிறையில் இருந்தபடியே அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போதிலும், ஜாமீன் கிடைத்த பாடில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதை தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது நிலையில், அதில் ஜாமீன் வழங்க எந்த ஒரு நிபந்தனையும் ஏற்க தயார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது மக்களவைத் தேர்தல் பரபரப்பாக இருந்து வரும் நிலையில் ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே போல முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.