முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 32 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய பட்ட நிலையில், தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். மேலும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருக்கும் நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலமாக புழல் சிறையில் இருந்தபடி ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.