33 ஆண்டு அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்த மன்மோகன் சிங்.., விடை பெறுகிறார் முன்னாள் பிரதமர்?33 ஆண்டு அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்த மன்மோகன் சிங்.., விடை பெறுகிறார் முன்னாள் பிரதமர்?

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், மூத்த அரசியல்வாதியான மன்மோகன் சிங் இன்று முதல் ஓய்வெடுக்க இருப்பதாக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள் மக்களின் வாக்குகளை சேகரிக்க தீவிர பிரச்சாரத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து வந்த  54 பேர் இன்று முதல் ஓய்வு பெற உள்ளனர். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக அரசியலில் ஒரு கை பார்த்து வந்தார். இவர் கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் 14வது பிரதமராக பதவியேற்று, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2014ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார்.

இதற்கு முன்னர் இவர் கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரை முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். அதுமட்டுமின்றி ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் விளங்கி வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் இப்பொழுது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் இவரின் ஓய்வையொட்டி அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பதவி ஏற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்?.., முன் உதாரணமாக அமைந்த கோர்ட் ஆர்டர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *