தற்போதைய காலகட்டத்தில் மக்கள் நிற்க கூட நேரமில்லாமல் பறந்து பறந்து வேலை பார்த்து வருகிறார்கள். மேலும் மக்களின் பயணத்திற்கு முதல் சாய்ஸாக ரயில் பயணம் இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல் பயணிகளுக்காக பல நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. தற்போது கூட தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நெல்லை மற்றும் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கிடையே இருவழிப் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரத்தில் மாற்றம் ஏற்பட இருப்பதாகவும், வருகிற பிப் 11ம் தேதி முதல் பிப் 21ம் தேதி வரை பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண்(16862) வருகிற 12ம் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு புறப்பட்டு புதுசேரியை சென்றடையும். அதே போல் வாஞ்சி மணியாச்சி பகுதியில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் (06679) அடுத்த மாதம் 1, 2, 5, 8, 9 ஆகிய தேதிகளில் 3 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.