குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25 க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மே மாதத்திற்கான பருப்பு, பாமாயில் ஜூன் தொடக்கத்தில் வழங்க ஏற்பாடு :
தற்போது இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதன் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பு போன்றவற்றிற்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும். இருந்தாலும் அரசின் தொடர் முயற்சியின் காரணமாக பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நேற்று வரை 82.82.702 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பும், 75.87,865 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலை கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அந்த வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மே மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மே மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் ஜூன் மாதம் முதல் வாரம் வரை நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது