குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம்
குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகாமையில் இருக்கும் கோடே பாளையத்தைச் சேர்ந்தவர் தான் பன்னீர் செல்வம் (30). இவர் கடந்த 2018ல் துர்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் துர்காவுக்கு 2வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சுக பிரசவத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் காலை குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷன் செய்யப்பட்ட நாளில் மாலை நேரம் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி அவருக்கு மிகுந்த ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்த மருத்துவர்கள் துர்காவை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கணவன் தனது மனைவிக்கு தவறான சிகிச்சை செய்ததால் தான் உயிரிழந்தார் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.