மலையாளத்தில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் பிரகாஷ் கொலேரி. இவருக்கு 65 வயதாகும் நிலையில் தன்னுடைய வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்த நிலையில் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது சென்று போது இயக்குனர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், அவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இது கொலையா அல்லது தற்கொலையா போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.