Home » செய்திகள் » சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் – காவல்துறை அதிரடி நடவடிக்கை !

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் – காவல்துறை அதிரடி நடவடிக்கை !

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் - காவல்துறை அதிரடி நடவடிக்கை !

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காகச் சுட்டதில் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து போலீஸ் என்வுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சென்னை பிராட்வே அருகே உள்ள பி.ஆர்.என் கார்டன் பகுதியில் பிறந்தவர்.

மேலும் இவர் காக்கா தோப்பு பகுதியில் ரவுடிகளாக இருந்த யுவராஜ் மற்றும் இன்பராஜ் உடன் தொடர்ந்து நட்பில் இருந்து வந்துள்ளார், இதனை தொடர்ந்து தொழில் போட்டி காரணமாகக் கூட்டாளியான யுவராஜை காக்கா தோப்பு பாலாஜி கொன்றதாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் இவர் செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டு வந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இவர் மீது கொலை வழக்குகள், அடிதடி, மிரட்டல், ஆட்கடத்தல் என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகச் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி – வீடியோவால் வெடித்த சர்ச்சை!!

இந்நிலையில் சென்னையை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது 14 கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அந்த வகையில் காக்கா தோப்பு பாலாஜி சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, கைது செய்யச் சென்ற போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காகச் சுட்டதில் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக இவரது உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top