மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது: சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் வாழை. மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு சினிமா பிரபலங்களையும் கண் கலங்க வைத்துள்ளது. இது மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கியுள்ளதாக சமீபத்தில் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது
இப்படம் தற்போது வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த கதை தன்னுடைய கதை என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் தனது முகநூலில் கருத்து பதிவிட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, ” எனக்கு பல நபர்கள் கால் செய்து வாழை படத்தை பார்க்க கூறினார்கள். அதன்பிறகே படத்தை நான் பார்த்தேன். Famous writer cho dharman
இந்த கதையின் சிறு கதையை நான் 10 வருடங்களுக்கு முன்னரே எழுதி இருந்தேன். என் உறவினர்கள் வாழை தோட்டத்தை வைத்துள்ளனர். அங்கு சிறுவர்கள் படும் கஷ்டத்தை வைத்து தான் நான் கதை எழுதி இருந்தேன். அப்படி நான் எழுதிய என் கதையில் லாரி, கிளீனர்,இடைத்தரகர், டிரைவர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள் அவர்கள் படுகின்ற கஷ்டம்,கூலி உயர்வு எல்லாம் உண்டு. mari selvaraj
Also Read: நடிகர் மோகன்லால் ராஜினாமா – கலைந்தது மலையாள நடிகர் சங்கம்!
ஆனால் வாழை படத்தில் இருக்கும் டீச்சர்,கர்ச்சீப்,காலாவதியாகிப் போன பொருட்கள், கம்யூனிஸ்ட் கட்சி சின்னம் போன்றவை என்னுடைய கதையில் இருக்காது. இப்போது சினிமாவுல வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என் கதை இலக்கியமாகவே நின்று விட்டது என்று கூறியுள்ளார். தற்போது அவருடைய பதிவு இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. Vaazhai movie
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்