மத்திய அரசு சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், தற்போது இளம் விவசாயி ஒரு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் நிறுத்தம்
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த சில நாட்களாக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது விவசாயிகள் கிட்டத்தட்ட 13 கோரிக்கைளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸ் தரப்பில் இருந்து புகை குன்டுகளை வீசி கூட்டத்தை கலைத்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் சில உயிர்களும் பறிபோயுள்ளது. தற்போது வரை மத்திய அரசு விவசாயி மக்களுக்கு செவி சாய்க்காததால் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி தற்போது பஞ்சாப்-ஹரியானா எல்லை பகுதியில் சக்தி வாய்ந்த டிராக்டர்கள், தடுப்புகள் என ஆகியவற்றை வைத்து கொண்டு விவசாயிகள் நடத்திய போரட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் போலீசுக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 12 போலீசாரும், 3 விவசாயிகளும் படுங்காயம் அடைந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் போராட்டத்தை 2 நாட்கள் கைவிட விவசாய சங்க தலைவர் தெரிவித்தார்.