சாலை வசதி இல்லாத மலை கிராமம்: இறந்த மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற அப்பா - கண்கலங்க வைக்கும் சம்பவம்!!சாலை வசதி இல்லாத மலை கிராமம்: இறந்த மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற அப்பா - கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

ஒரு தந்தை மகன் உயிரிழந்த நிலையில் அவரின் உடலை தூக்கி கொண்டு மலை கிராமத்திற்கு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் சின்ன கொனேலா என்ற ஒரு மலை கிராமம் இருக்கிறது. மிகவும் பின்தங்கிய கிரமமாக இருக்கும் அந்த கிராமத்தில் பெரிதாக எந்த வசதியும் இல்லை. குறிப்பாக அடிவாரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு ஒரு சாலை வசதி கூட கிடையாது. ஏதேனும் மருத்துவ வசதிக்கு கூட மலை காட்டுக்குள் நடந்து சென்று அடிவாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவல நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த கிராமத்தில் கோதையா என்பவர் தனது மனைவி சீதா , 2-வது மகன் ஈஸ்வர ராவ் (வயது 2½) வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வர ராவுக்கு உடல்நிலை குன்றிய நிலையில், அவரை அடிவாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு சிறுவன் பரிதாபமாக இறந்தான். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் உடலை எடுத்துச் சென்றனர். மேலும் ஒரு இடத்தில் சிறுவனின் உடலை இறக்கி விட்டு சென்று விட்டனர். அப்போது மேகம் இருட்டிய நிலையில், இறந்த சிறுவனுடன் அவர் அப்பா, அம்மா இரவு நேரம் முழுவதும் தூங்காமல் அழுது கொண்டே இருந்து வந்துள்ளனர். மறுநாள் காலையில் கோதையா தனது மகன் உடலை சுமந்தபடி நடக்கத் தொடங்கினார். இரண்டு மலைகள் வழியாக சுமார் 3 மணி நேரம் மகன் உடலை சுமந்தபடி அவரது மலை கிராமத்தை சென்று அடைந்து, அவருக்கு இறுதி சடங்குகளை செய்து முடித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணன் மீது ஹர்திக் பாண்டியா கொடுத்த திடீர் புகார்.., அதிரடியாக கைது செய்த போலீஸ் – இரண்டாக பிளந்த குடும்பம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *