தமிழ்நாடு , காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்பநிலை ஆனது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் வெயில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்க வாய்ப்புள்ளது. பிப்ரவரி 17 முதல் 21 ம் தேதி வரை நிலவும் வானிலை அறிவிப்பு: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்ப நிலை 32 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் , மே, ஜூன் மாதங்களில் தான் கோடை வெயில் அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதமே பனி குறைந்து வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த 2 நாட்களில் லேசான மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் எந்த மழையும் எட்டி பார்க்கவில்லை மாறாக வெயில் தான் வெளுத்து வாங்குகிறது. கோடை வெயில் இப்போது இருந்தே சுட்டெரிக்க தொடங்கி விட்டது போலும்.