இந்த ஆண்டு 2025 பிப்ரவரியில் ரிலீஸாகும் 3 படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்களுக்கு பொழுது போக்காக திரைப்படம் தான் இருந்து வருகிறது. குறிப்பாக பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் புது படம் பார்ப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வணங்கான், கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயோ உள்ளிட்ட பல படங்கள் வெளியானது.
2025 பிப்ரவரியில் ரிலீஸாகும் 3 படங்கள்.., பிள்ளையார் சுழி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் விடாமுயற்சி!!
இந்த படங்களுடன் சேர்ந்து கடந்த 10 வருடங்களாக கிடப்பில் இருந்து வந்த மதகஜராஜா படமும் வெளியாகி இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் வெற்றி பெற்ற படமாக இருந்து வருகிறது. மற்ற படங்களை காட்டிலும், இந்த படத்திற்கு கூட்டம் அலைமோதுகிறது. இதில் காமெடி, கிளாமர் போன்ற விஷயங்கள் அதிகமாக இருப்பதால் மக்களுக்கு பிடித்து போனது. இந்நிலையில் நடிகர் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வருகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் தான்? போட்டோவுடன் வெளியான ஆதாரம்!!!
இந்த அறிவிப்பை லைக்கா நிறுவனம் சமீபத்தில் ட்ரைலருடன் வெளியிட்டது. இந்த படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே போல் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற ரொமான்டிக் காதல் படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த மூன்று படங்கள் தான் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது. பார்க்கலாம் யாரு படம் வெற்றி வாகை சுட போகிறது என்று.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!
அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!
பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!