தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் என்ற புயல் போல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, இன்று பிற்பகல், ஃபெஞ்சல் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!
மேலும் இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று காலை முதல் சென்னை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் – பிரகதி உதவித்தொகை திட்டம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? நாளை கடைசி நாள்!
இருப்பினும் மாநகர பேருந்து சேவை வழக்கம்போல் இன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையின் முக்கிய பகுதியான மெரினா கடற்கரை சாலை இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறிப்பாக ECR மற்றும் OMR சாலைகளில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு, ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்