பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல். தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அப்போது பாமக மற்றும் பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாஜக – பாமகவினர் இடையே மோதல் :
கடலூரில் முத்துநகர் பகுதியில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பாஜக – பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் எங்களை பாராட்டியிருப்பார் ! பாஜகவில் இணைந்தது குறித்து ராதிகா சரத்குமார் கருத்து !
அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்ளும் போது வாகனத்தின் முன் யார் நிற்பது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின் மோதலாக மாறியது. இதனால் கடலூரில் முத்துநகர் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.