சோஷியல் மீடியாக்களில் இருந்து ஃபில்டர் ஆப்ஷன் நீக்கம் - மெட்டா நிறுவனம் அறிவிப்பு !சோஷியல் மீடியாக்களில் இருந்து ஃபில்டர் ஆப்ஷன் நீக்கம் - மெட்டா நிறுவனம் அறிவிப்பு !

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சோஷியல் மீடியாக்களில் இருந்து ஃபில்டர் ஆப்ஷன் நீக்கம் செய்யப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. filter option Removal from social media like Instagram, Facebook and WhatsApp

தற்போது சமூக வலைதளங்களின் தாக்கத்தால் இளம் தலைமுறையினர் பெரும்பாலான நேரங்களை தங்களது மொபைல் போனிலேயே கழித்து வருகின்றனர். மேலும் சோஷீயல் மீடியாக்களில் தங்களின் புகைப்படங்களைப் பதிவிடுவது, லைக்ஸ், பார்வைகளை அதிகரிக்க வித்தியாசமான செயல்களைச் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் குறிப்பாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் தான் இளம் தலைமுறையினரை அதிகம் ஆட்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தங்களது தோற்றம் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள பில்டர் ஆப்ஷன்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் மெட்டா நிறுவனம் இனி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சோஷியல் மீடியாக்களில் இனி ஃபில்டர் ஆப்ஷன்களை வரும் 2025 ஜனவரி முதல் நீக்கப்படும் என மெட்டா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக முதல் மாநாடு – தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

அழகை அதிகரித்துக் காட்டும் இந்த வகையான ஃபில்டர் ஆப்ஷன்கள் உண்மைக்குப் புறம்பான தோற்றத்தினைக் கொடுக்கிறது.

இதனால் இளம் தலைமுறையினருக்கு தங்கள் உடலமைப்புக் குறித்த மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே இதனை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நீக்கப் போவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *