சினிமா துறையில் முதன்முதலாக 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா? அட இந்த விஜய் பட பிரபலமா?

விஜய் பட பிரபலமா?

தற்போதைய சினிமா துறையில் விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால் 90ஸ் காலகட்டத்தில் ஒரு கோடி வாங்குவதற்கே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் ரஜினி, கமல் இருக்கும் சமயத்திலே ஒரு நடிகர் 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. அட ஆமாங்க, அது வேற யாரும் இல்லை. நம்ம ராஜ்கிரண் தான். அப்பவே ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி மாஸ் காட்டியுள்ளார்.

அதே போல் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிய நடிகையை பற்றி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் யார் என்றால் தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருந்த ஸ்ரீதேவி தான். நடிகை ஸ்ரீதேவி  நடித்த முதல் படத்தில் ஐந்து ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

அடுத்து பிசியான நடிகையாக மாறிய அவர் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனால் அவருடைய மார்க்கெட் எக்குத்தப்பாக உயர்ந்தது. இதையடுத்து சினிமாவின் உச்சத்திற்கு வந்த இவர் நடித்த ஒரு இந்தி படத்திற்காக ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இதன் மூலம் இந்திய சினிமாவில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடைசியாக விஜய் நடித்த புலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தன்னுடைய வாயால் மொத்தத்தையும் இழந்த மன்சூர் அலிகான்., இப்போ கட்சியும் போச்சா?.., நிர்வாகிகள் அதிரடி முடிவு!!

Leave a Comment