இனி Flipkart ஆன்லைன் ஆர்டர் -ரை கேன்சல் செய்தால் கட்டணம் வசூலிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கட்டணம்:
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடைக்கு சென்று நாம் ஆசைப்பட்ட காலம் மலையேறி போச்சு. இப்போதெல்லாம் ஏதேனும் பொருள் வாங்க வேண்டுமென்றால் குண்டூசி முதல் தங்கம் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ஆன்லைனில் ஆர்டர் போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கின் போது நிறுவனங்கள் பல்வேறு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.
Flipkart ஆன்லைன் ஆர்டர் – இனி கேன்சல் செய்தால் கட்டணம்? – வெளியான முக்கிய தகவல்!!
மேலும் ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்து விடுவதால் பெரும்பாலான மக்கள் இதையே விரும்புகிறார்கள். அப்படி வீடு தேடும் வரும் பொருட்கள் பிடிக்கவில்லை என்றால், குறிப்பிட்ட நாட்களுக்குள் (Return) திருப்பி அனுப்பி விடலாம். அதுமட்டுமின்றி, ஆர்டர் செய்த பிறகு பொருட்கள் டெலிவரி செய்யப்படும் முன்னே கூட கேன்சல் செய்யும் வசதியும் இருக்கிறது. ஆனால் அதற்கு எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை.
டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் – ஆவின் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இந்நிலையில் Flipkart மற்றும் Myntra போன்ற தளங்கள் ஆன்லைன் ஆர்டரை கேன்சல் செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தற்போது திட்டமிட்டு வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் ஆர்டரை டெலிவரி நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய இந்த முடிவை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களின் விலை மற்றும் பிற காரணிகளை பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும். இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வரும் தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
குற்றால அருவியில் இன்று (டிச. 12) குளிக்க தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் – 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – முழு விவரம் இதோ !