சிக்கிமில் வெள்ளம் ! 23 ராணுவ வீரர்கள் மாயம். சிக்கிமில் இருக்கும் டிஸ்டா ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்தில் மொத்தம் 30 பேர்களை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 23 பேர்கள் ராணுவ வீரர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சிக்கிமில் வெள்ளம் ! 23 ராணுவ வீரர்களின் கதி என்ன !
வெள்ளப்பெருக்கு காரணம் :
மேக வெடிப்பின் காரணமாக திடீரென்று அதிகளவு மழை சிக்கிம் பகுதியில் பெய்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் வடக்கு சிக்கிம் பகுதியில் இருக்கும் லோக்ஷாக் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் வடக்கு சிக்கிம் பகுதியில் இருக்கும் சும்தான் அணையில் இருந்து முன் அறிவிப்பு இல்லாமல் அணை நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் லாச்சென் பள்ளத்தாக்கில் இருக்கும் டீஸ்டா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளது.
JOIN WHATSAPP | CLICK HERE |
30 பேர்கள் காணவில்லை :
பயங்கர வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 அடிக்கும் தாழ்வாக இருக்கும் பகுதிகளில் வெள்ளம் உயர்ந்ததாக தகவல். மேலும் 30 பேர்கள் வரையில் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு வாகனங்களும் இவ்வெள்ளத்தில் அடித்து சென்றுள்ளது. மேலும் இந்த ஆற்றில் இருக்கும் மின்நிலையங்களிலும் சேதாரம் அதிகரித்து உள்ளது.
23 ராணுவ வீரர்கள் கதி என்ன :
சிக்கிம் பகுதி சீன ராணுவத்தின் எல்லையாக இருக்கின்றது. எனவே இந்த பகுதியில் அதிகளவு ராணுவ வீரர்கள் பணியில் இருப்பர். இப்பகுதியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயிருக்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரையில் காணாமல் போன 30 பேர்களில் 23 பேர்கள் ராணுவ வீரர்களாக இருக்கின்றனர் என்பது அதிர்ச்சியாக இருக்கின்றது.
நாளை பவர் கட் இருக்கு (அக்டோபர் 5) ! உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க !
சிக்கிம் பகுதியில் தற்போது வரையில் வெள்ளப்பெருக்கு குறைந்த பாடில்லை. வெள்ளம் குறைந்த பின் தான் இன்னும் எத்தனை பேர்கள் காணவில்லை. பாதிப்புகள் குறித்த அனைத்து தகவல்களும் நமக்கு தெரியும்.