சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல். சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தாய்ப்பால் விற்பனை :
தாய்ப்பால் என்பது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலானது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவக் கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு மட்டுமே தரப்படவேண்டுமே தவிர அதனை எந்தவொரு வணிக நோக்கத்துக்கும் பயன்படுத்தக்கூடாது. இந்நிலையில் சமீபத்தில் தாய்ப்பாலை காசுக்கு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
அத்துடன் ஆன்லைனிலும் தாய்ப்பால் விற்பனை நடைபெற்று வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் :
சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து தாய்ப்பாலை விற்பனை செய்த முத்தையா என்பவரின் கடைக்கு தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். .
அத்துடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை :
இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006 விதிகளின் படி தாய்ப்பாலை பதப்படுத்துதல் அல்லது விற்பனை செய்வதர்க்கு அனுமதியில்லை எனவும், தாய்ப்பால் மற்றும் அது தொடர்பான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அவ்வாறு விதிகளை மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து தாய்ப்பால் விற்பனையில் ஈடுபட்டுள்ள உணவு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கக்கூடாது என்றும்,
வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது – வனத்துறை அறிவிப்பு !
அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.