தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு ரேஷன் கடை1 வாயிலாக மலிவான விலையில் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில மற்றும் மத்திய அரசு2 மக்களுக்காக வழங்கும் திட்டங்களையும் நியாய விலை கடை மூலமாக தான் வழங்கி வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் ஊழல் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் அரிசி கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் துறை ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, 80 வயதுக்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்று ஊழியர்கள் வற்புறுத்தக்கூடாது. அரசின் உத்தரவை மீறியும் வயதானவர்களை கடைக்கு அழைத்தால் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – ration card holders – tamilnadu ration shop – Food Supply Department
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி – சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா?
சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு