தமிழகத்தில் இந்த கிராமத்தில் செருப்பு அணிந்தால் தண்டனை: இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களில் வாழும் மக்கள் தங்களுக்கென ஒரு பாரம்பரியத்தையும் மரபுகளையும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஒரு புதுவித பழக்கத்தை பழகி வருகிறார்கள். அதாவது, மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் முக்கிய டூரிஸ்ட் பகுதியாக இருந்து வருகிறது.
மேலும் கொடைக்கானலின் வனப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளகவி என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கு வாழும் மக்கள், செருப்பு அணிவதை தடை செய்துள்ளது. எனவே அந்த கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வரும் நிலையில், யாரேனும் செருப்பு அணிந்திருந்தால், அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுமாம். மேலும் இந்த கிராமத்திற்கு செல்ல சாலைகள் ஏதும் இல்லை.
தமிழகத்தில் இந்த கிராமத்தில் செருப்பு அணிந்தால் தண்டனை
கிராமத்து செல்ல வேண்டும் என்றால், மலையேறி தான் செல்ல வேண்டும். மேலும் கிராமத்தின் முகப்பு வாயிலில் ஒரு பெரிய மரம் உள்ளது. அந்த மரத்தை மக்கள் வழிபட்டு வருகிறார்கள். எனவே அங்கு வசிப்பவர்களின் மத நம்பிக்கையின் காரணமாக மக்கள் செருப்பு அணிவதை தவிர்க்கிறார்கள்.
இன்ஸ்டா பேஸ்புக் பயன்படுத்த தடை – ஆஸ்திரேலிய அரசு போட்ட அதிரடி திட்டம்!
இந்த நம்பிக்கைக்கு எதிராக யாராவது சென்றால், அவர்கள் தெய்வ குற்றத்திற்கு ஆளாவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருந்தாலும் கூட, மக்கள் செருப்பு அணிவதை தவிர்த்து வருகின்றனர்.
மேலும் இந்த கிராமத்தில் மக்கள் இரவு 7 மணிக்கு உறங்கி விடுவார்களாம். 7 மணிக்கு பிறகு மக்கள் சத்தம்போடவோ, இசை கேட்கவோ அல்லது அதிக சத்தத்துடன் ஒலி இசைக்க கூடாது என்ற சட்டமும் இருக்கிறது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?
TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு