
வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
அதாவது வெளிமாநில தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி புதிய குடும்ப அட்டை பெற விரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் www.eshram.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பிக்கும் மக்கள் புதிய குடும்ப அட்டை பெற்றதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் பொருட்களைப் பெற்று கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Also Read: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?
தற்காலிகமாக அல்லது குறைந்த காலம் வசிக்கக்கூடிய அல்லது குடும்பத்தை பிரிந்து தனியாக வசிக்கும் நபர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகள் வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. foreign workers ration card apply
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை