உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வனப்பகுதி என்பதாலும் விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் வெளியாட்கள் அந்த வனப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
குறிஞ்சி மலர் :
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் தற்போது உதகையில் பூத்துள்ள. மேலும் உதகையில் பாதுகாக்கப்பட்ட மலை பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை காண வெளி ஆட்கள் யாரும் செல்லக் கூடாது என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் வனத்துறையின் உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வனவிலங்கு நடமாட்டம் :
இந்நிலையில் உதகையில் எப்பநாடு அருகே பிக்கப் பத்தி மந்து மலை பகுதியில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்? வெளியான முக்கிய தகவல்!
அந்த வகையில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதியானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும் விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் வெளியாட்கள் அந்த வனப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.