Home » செய்திகள் » நாளை(பிப் 17) கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை.., இது தான் காரணமா?., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாளை(பிப் 17) கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை.., இது தான் காரணமா?., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாளை(பிப் 17) கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை.., இது தான் காரணமா?., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ” INSAT-3DS” என்ற புதிய செயற்கைகோளை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் இயற்கை பேரிடர், வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் அம்சமாக கொண்டுள்ளது. இதன் பணி முழுமையாக முடிவடைந்த நிலையில், ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் இன்று மாலை ஆரம்பிக்க இருக்கிறது. மேலும் இந்த செயற்கை கோளை ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் என்ற ஏவுதளத்தில் இருந்து நாளை (பிப்ரவரி 17)ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

எனவே அதற்கான பணிகளில் தற்போது  இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்மரமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் ராக்கெட்டின் உதிரி பாகங்களை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே நாளை ராக்கெட்  விண்ணில் செலுத்தப்பட இருப்பதால், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புருஷனை டைவர்ஸ் செய்யும் சீரியல் நடிகை  ஆலியா மானசா? பழிவாங்க நினைச்சேன்.., ஆனா.., உண்மையை உடைத்த பிரபலம்!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top