பயிற்சியாளர் பணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்ச்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தற்போது புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் கெளதம் கம்பீரை தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ தன்னை அணுகியதாவும், தான் அதை நிராகரித்ததாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
பயிற்சியாளர் பணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை பிசிசிஐ கருத்து :
இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் நிராகரித்ததாக தகவல் வெளியானது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி – சமூக நலத்துறை அறிவிப்பு !
இது தொடர்பாக விளக்கமளித்த ஜெய் ஷா இந்திய அணிக்கு சரியான பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானது என்றும், இந்திய கிரிக்கெட் அணியின் கட்டமைப்பை பற்றி புரிதல் உள்ளவர்களையே நாங்கள் பயிற்ச்சியாளராக தேர்வு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.