Home » செய்திகள் » திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா – அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை !

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா – அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை !

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா - அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை !

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா. திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவானது திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இதனையடுத்து சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் அண்ணாசாலையில் அமைந்துள்ள ஓமந்தூராா் வளாகம், கோடம்பாக்கம் முரசொலி வளாகம், அண்ணா அறிவாலயம் ஆகியவற்றில் அமைந்துள்ள கருணாநிதி சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் படி மாநிலம் முழுவதும் திமுகவினர் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தியும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top