ஆளுநர் என்ன செய்கிறார் ?. திமுக அரசிற்கும் ஆளுநர் R.N ரவிக்கும்இடையேயான மோதல்போக்கானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் என்ன செய்கிறார் ?
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆளுநரை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம் :
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த நிலையில் அவர் மீண்டும் MLA வாக தொடர்வதில் எந்த தடையும் இல்லை என கருதப்பட்டு வந்த நிலையில் பொன்முடியை மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தார். இதனை கண்டுகொள்ளாத ஆளுநர் R.N ரவி பதவிப்பிரமாணம் செய்துவைக்க முடியாது என கோப்புகளை கையழுத்திடாமல் திருப்பி அனுப்பினார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு. இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநர் R.N ரவிக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அதனை மதிக்காமல் இவ்வாறு நடந்து கொள்வது அரசியல் சாசனத்தை மதிக்காத செயல் என்றும்,
ஓபிஎஸ் அணிக்கு தொகுதி இல்லை?.., பாஜக வச்ச ஆப்பு?.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!
இது சமந்தமாக ஆளுநர் விரைவில் முடிவை தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் உச்சநீதிமன்றம் சட்டத்தின் படி கடுமையான தீர்ப்பு வழங்கும் என உச்சநீதிமன்றம் ஆளுநர் R.N ரவிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.