லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி கே.டி.சிங் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை அதிரடி
நாடாளுமன்றம் மக்களவை தேர்தலையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான கே.டி. சிங் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது கே.டி. சிங் அல்கெமிஸ்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அல்கெமிஸ்ட் டவுன்ஷிப் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு தலைவராக இருந்து வரும் நிலையில், அந்நிறுவனத்தின் மூலம் மக்களிடம் இருந்து ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. மேலும் மக்கள் கொடுத்த பணத்தை வைத்து அவர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டி தருவதாகவும், அதிக வட்டி விகிதம் தருவதாக கூறி அந்நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து அறிந்த சிபிஐ அந்த மூன்று நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்திய நிலையில் அல்கெமிஸ்ட் குழுமத்துக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பீச்கிராஃப்ட் விமானம், அந்த குழுத்துக்கு சொந்தமான குடியிருப்புகள் மற்றும் சொத்துகள் ஆகியவை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. அதன் மொத்த மதிப்பு ரூ.29.45 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.