Home » செய்திகள் » அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு.., உலக தலைவர்கள் இரங்கல்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு.., உலக தலைவர்கள் இரங்கல்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு.., உலக தலைவர்கள் இரங்கல்!!

ஜனாதிபதியாக இருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு குறித்த செய்தி வெளியானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றவர் தான் ஜிம்மி கார்டர். 1924 ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த இவர், கடந்த 1946ம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகடாமியில் பட்டம் பெற்றார். அதன்பிறகு, நீர்மூழ்கி கப்பல் துறையில் பணி புரிந்தார். அந்த வேலை முடிந்ததும், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வேர்க்கடலை விவசாய தொழிலை செய்து வந்தார்.

அதன் பின்னர் அவரின் கடின உழைப்பால் 1971ம் ஆண்டு ஜார்ஜியாவின் 76 வது ஆளுநராக பொறுப்பேற்றார். மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். இதனாலேயே அவர்  1977- ஆம் ஆண்டு முதல் 1981- ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார். மேலும் மக்கள் சமூக நீதியை கடைபிடிக்க வேண்டும் என்று, சண்டை சச்சரவு இல்லாமல் வாழ வேண்டும் என்பதில் முக்கிய பங்காற்றி வந்தார். அதுமட்டுமின்றி,  இஸ்ரேல் மற்றும் எகிப்து இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவும் இவர் தான் முக்கிய பங்காற்றினார்.

இதன் காரணமாகவே அவருக்கு கடந்த 2002ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்படி மக்களுக்காக வாழ்ந்த அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த நிலையில் ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!

2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

விஜயகாந்த் முதல் குரு பூஜைக்கு வந்த தவெக விஜய்?.., அண்ணனுக்காக நான் வரமா எப்படி?

வண்டலூர் பூங்கா செவ்வாய்கிழமை திறந்திருக்கும்! வருட பிறப்பை முன்னிட்டு அறிவிப்பு!

மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., இரவு 1 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு?.., அரசு அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top