பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது – நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் பிரான்சில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணி கட்சி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷேல் பார்னியேர் பொறுப்பேற்றார். இதனால் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதற்கிடையில், 2025-ம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி,இந்த தீர்மானத்தில் மொத்தம் இருக்கும் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரான்ஸ் அரசு கவிந்தது. இதையடுத்து பார்னியேர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா?
இதையடுத்து அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சமூகப் பாதுகாப்பு நிதி மசோதாவை சிறப்பு அதிகாரம் மூலம் அதிபர் மேக்ரான் நிறைவேற்ற முயன்றதால் அரசு கவிழ்க்கப்பட்டது. பிரான்ஸ் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்