பாரிஸ் நகரில் புயல் எச்சரிக்கை - ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு !பாரிஸ் நகரில் புயல் எச்சரிக்கை - ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு !

தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் பாரிஸ் நகரில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.France issued a storm warning

தற்போது 33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியானது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் கடந்த ஜூலை 26ம் தேதி தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அங்கு கடும் புயல் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.Olympic Games in Paris 2024

அந்த வகையில் பிரான்சின் வானிலை ஆய்வு மையம் பாரீஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பெரிய அளவிலான புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த எச்சரிக்கையால் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வீசும் புயலானது தீவிரமடைந்து ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டர் முதல் 40 மில்லி மீட்டர் வரை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ! !

தற்போது பாரிஸ் நகரில் நான்காவது நாள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 35 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.storm warning for the Paris Olympic Games 2024

அதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரான்சில் சுற்றியுள்ள நகரங்களிலும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் மத்திய மற்றும் தெற்கு பிரான்ஸ் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை தாண்டி பதிவாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *