அரசு பள்ளிகளில் JEE NEET இலவச பயிற்சிஅரசு பள்ளிகளில் JEE NEET இலவச பயிற்சி

  அரசு பள்ளிகளில் JEE NEET இலவச பயிற்சி வழங்கப்படும். தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் JEE மற்றும் NEET போட்டி தேர்வுகளுக்கு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அரசு பள்ளிகளில் JEE NEET இலவச பயிற்சி வழங்கப்படும் ! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ! 

அரசு பள்ளிகளில் JEE NEET இலவச பயிற்சி

JEE , NEET பயிற்சிகள் :

  மத்திய அரசின் சார்பில் உயர் கல்வி பெறுவதற்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இத்தகைய JEE மற்றும் NEET போன்ற தேர்வுகளுக்கு பல தனியார் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றது. தனியார் பயிற்சி மையங்கள் என்பதால் அதிகளவில் பணம் கட்டி தான் பயிற்சி பெற வேண்டும்.இதனால் நடுத்தர குடும்பத்தினர் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

JOIN WHATSAPP CHANNEL

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :

  தமிழக அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு JEE , NEET தேர்வுக்கான பயிற்சிகள் வழங்க வேண்டும். மேலும் இந்த பயிற்சிகள் பள்ளி வேலை நாட்கள் அனைத்து தினங்களிலும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பயிற்சி வழங்க வேண்டும். இந்த பயிற்சிகளை விருப்பம் இருக்கும் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை பயிற்சியில் சேர்ந்து கொள்ள ஆர்வப்படுத்தலாம் ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது. 

ஆசிரியர்கள் கவனத்திற்கு :

  இந்த பயிற்சிகளுக்கு தாவரவியல் , இயற்பியல் , விலங்கியல் , வேதியியல் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும் NEET , JEE போட்டிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் தன்னார்வாளர்களாக இணைத்து பயிற்சி வழங்கலாம். வார இறுதி நாட்களில் சிறப்பு தேர்வுகள் மற்றும் அரையாண்டு மற்றும் முழுஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். 

நாளை மின்தடை பகுதிகள் ( 03.11.2023 ) ! இன்வெட்டர் வோர்க் ஆகுதானு செக் பண்ணிக்கோங்க ! 

  பயிற்சி வகுப்பிற்க்கான பாடத்திட்டம் பள்ளி கல்வி இயக்கத்தால் வழங்கப்படும். இதனை ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முந்தைய வினாக்கள் , சூத்திரங்கள் , எதிர்பார்க்கப்படும் கேள்விகள் என அனைத்தும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.  

கால அட்டவணை :

  திங்கள் – தாவரவியல் / கணிதம் 

  செவ்வாய் – இயற்பியல் 

  புதன் – விலங்கியல் / கணிதம் 

  வியாழன் – வேதியியல் 

  வெள்ளி – மீள் பார்வை / சிறு தேர்வு 

மேற்கண்ட கால அட்டவணையை ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை எழுந்து தேர்வினை ரத்து செய்ய 50ஆயிரம் பேர்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் நடைபெற்று வருகின்றது. ஆனால் அடுத்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்களும் தயாராக இருக்க வேண்டும். தனியார் பள்ளி மாணவர்கள் பலர் தனியார் பயிற்சி நிறுவனங்களில் போட்டித்தேர்வுகளுக்கு படிக்கின்றார்கள் . அரசு பள்ளிகளில் மத்திய அரசு பள்ளிகளில் படிக்கும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு பள்ளிகளில் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்குவது மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *