
சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியானது.2 நிமிடம் 48 நொடிகள் ஓடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்புக்கு ஏற்ப தொடக்க காட்சி சண்டையாக உள்ளது.
பின்னர் சுந்தர் சி பள்ளியின் PT மாஸ்டராக அறிமுகம் ஆகிறார். அதே பள்ளியில் வடிவேலு PT சாராக வேலைபார்த்து வருகிறார். அந்த பள்ளியில் இருவருக்கும் நடக்கும் சம்பவம் காமெடி கலந்த சீனாக வருகிறது.
அதே வேளையில் சுந்தர் சி ஒரு போலீஸ் என்றும் ஆனால் 100 கோடியை கொள்ளை அடிக்க போவதாகவும் திரைக்கதை உள்ளது. கழுத்துக்கு கீழ் யோகாசனம் என்னும் வசனம் அதுக்குள் ட்ரெண்ட் ஆக தொடங்கி உள்ளது.