கஞ்சா கடத்தல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே 4ம் தேதி பெண் காவல் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்த அவரை கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிரடியாக கைது செய்தது. இதனை தொடர்ந்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவருடைய காரில் கஞ்சா இருப்பதை பார்த்த காவல்துறை சவுக்கு சங்கர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
நீதிபதி செங்கமலச் செல்வன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சவுக்கு சங்கர் காவல்துறையினர் தன்னை தாக்கியதாகவும், தனது கோவை சிறையில் பாதுகாப்பு இல்லை என்று கூறி, தன்னை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் சிறையை மாற்றுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், சிறை அதிகாரிடம் கோரிக்கை வைத்து மாறி கொள்ளுமாறு தெரிவித்தார். மேலும் அவருக்கு மே 22 வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பெண்கள் சவுக்கு சங்கரை அழைத்து செல்லப்பட்ட வாகனத்தின் மீது துடைப்பங்களை வீசி எறிந்து கோஷமிட்டனர்.